2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

$200 மில்லியனை செலவுசெய்கிறது ஆஸி

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்புவா நியூ கினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் அகதிக் கோரிக்கையாளர்களுக்கும் என, சுமார் 195 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, அவுஸ்திரேலிய அரசாங்கம் செலவிடவுள்ளது. மனுஸ் தீவில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம், இம்மாதம் 31ஆம் திகதியுடன் மூடப்படுவதைத் தொடர்ந்தே, இவ்வறிவிப்பை, அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

ஆனால், மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிக் கோரிக்கையாளர்களில் பலர், அங்கிருந்து வெளியேறுவதற்குத் தயாராக இல்லாத நிலையில், மிகப்பெரிய அழுத்தத்தை, அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ளது.

அவ்வாறு வெளியேறுவதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனுஸ் தீவில் உள்ள பொதுமக்களுக்கும் அகதிக் கோரிக்கையாளர்களுக்கும் இடையில், முரண்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, மனுஸ் தீவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அவர்கள் உள்ளனர் என, பப்புவா நியூ கினியின் பாதுகாப்புத் தரப்புகள் கருதுமாயின், இவர்கள் கைதுசெய்யப்படவும் கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .