2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘2007இல் சிரியாவைத் தாக்கினோம்’: இஸ்ரேல் ஏற்றது

Editorial   / 2018 மார்ச் 22 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் காணப்பட்ட அணுக்கரு உலை எனக் கருதப்படும் கட்டுமானத் தொகுதியொன்றின் மீது, 2007ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தி, அதை அழித்ததாக, இஸ்‌ரேல் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. குறித்த அணுக்கரு உலை, இஸ்‌ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது எனவும், அதனாலேயே அதை அழித்ததாகவும் குறிப்பிட்ட இஸ்‌ரேல், ஏனையோருக்கான செய்தியாகவும் அது அமைந்தது எனக் குறிப்பிட்டது.

இத்தாக்குதல் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு, இஸ்‌ரேலிய அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது தான், உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இராணுவத்தால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையைத் தொடர்ந்து, அத்தாக்குதல் தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டன. இதன்போது, டெய்ர்-அல்-ஸொர் பகுதிக்கு அண்மையாகவுள்ள பாலைவனப் பகுதியில் அமைந்திருந்த அல்-குபார் அணுக்கரு உலைப் பகுதி அழிக்கப்படுவது காட்டப்படுகிறது.

சிரியாவின் தோழமை நாடான ஈரான் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, ஐக்கிய அமெரிக்காவிடமும் சர்வதேச சமூகத்திடமும், இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரி வரும் நிலையிலேயே, முன்னைய தாக்குதலைப் பகிரங்கமாக்கும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .