2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் செனட்டர் கிர்ஸ்டன் ஜில்லிபிரான்ட்

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிர்ஸ்டன் ஜில்லிபிரான்ட், 2020ஆம் ஆண்டுக்கான ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் குதிப்பதாக நேற்று  அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விமர்சகரும் “மீ டூ” இயக்கம் உட்பட பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்துபவருமான கிர்ஸ்டன் ஜில்லிபிரான்ட், தேர்தலுக்கு 22 மாதங்கள் இருக்கையிலேயே போட்டியில் குதித்துள்ளார்.

அந்தவகையில், அண்மைய வாரங்களில் மூன்று பெண்கள் உட்பட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நால்வர் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் உத்தியோகபூர்வமான பிரசாரத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததுடன், சில செனட்டர்களும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதியான ஜோ பைடனும் காத்திருக்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக 2009ஆம் ஆண்டு ஹிலாரி கிளின்டன் நியமிக்கப்பட்டபோது அவரின் ஐக்கிய அமெரிக்க செனட் இடத்தை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்ட ஜில்லிபிரான்ட், கடந்தாண்டு நவம்பரில் தனது இரண்டாவது முழுமையான பதவிக்காலத்துக்காக இலகுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .