2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

2036 வரை புட்டினை அசைக்கமுடியாது

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்ய ஜனாதிபதியாக 2036ஆம் ஆண்டு வரையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருப்பதை அனுமதிக்கும் சட்டமொன்றை அவர் கைச்சாத்திட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

குறித்த சட்டத்தின்படி, ஜனாதிபதி புட்டினின் தற்போதைய பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் மேலுமிரண்டு ஆறாண்டு காலங்களுக்கு போட்டியிடுவதை குறித்த சட்டம் அனுமதிக்கின்றது. கடந்தாண்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்தே இது சாத்தியமாகின்றது.

இம்மாற்றங்கள் பொது வாக்கெடுப்பொன்றின் மூலம் ஆதரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 68 வயதாகும் ஜனாதிபதி புட்டின், 83 வயது வரை அதிகாரத்தில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இரண்டாவது தொடர்ச்சியான பதவிக்காலத்தையும், மொத்தமாக நான்காவது பதவிக்காலத்தையும் ஜனாதிபதி புட்டின் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டமூலமானது பாராளுமன்றத்தின் கீழ், மேற்சபைகளில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X