2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

25ஆவது திருத்தத்துடன் ட்ரம்ப்பை அகற்றுவதை எதிர்க்கும் பென்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியில் இருந்து அகற்றுவதற்காக 25ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை எதிர்ப்பதாக, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸிக்கு அந்நாட்டின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் நேற்று தெரிவித்துள்ளார்.

தேசத்துக்கோ  அல்லது  அரசமைப்புக்கு உட்பட்டோ இது  உகந்தது அல்ல என உப ஜனாதிபதி பென்ஸின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25ஆவது திருத்தின் கீழ் ஜனாதிபதியொருவரை அகற்றுவதற்கு, உப  ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் அமைச்சரவையின் பெரும்பான்மையின் பிரகடனமொன்று தேவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .