2024 மார்ச் 28, வியாழக்கிழமை

30க்கும் மேற்பட்ட நாடோடிகளை துப்பாக்கிதாரிகள் கொன்றனர்

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாலியில், 30க்கும் மேற்பட்ட துவாரக் நாடோடிகளை மோட்டார்சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் கொன்றதாக அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

நிலம், நீருக்க்காக வட மாலியில் மோதல்கள் சாதாரணம் என்ற நிலையில், ஏற்கெனவே மாலி, மேற்கு ஆபிரிக்கா மீது தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்லாமிய ஆயுததாரிக் குழுக்கள் குறிப்பிட்ட இடத்தையே தளமாகப் பயன்படுத்துகின்றநிலையில் இவ்வன்முறைகளால் பாதுகாப்பு மோசமான நிலையை எட்டியுள்ளது.

யார் தாக்குதலை மேற்கொண்டனர் என அடையாளங் காணப்படப்படாதபோதும் துவாரக் நாடோடிகளுக்கும் மேய்ச்சல்கார புலானி இனக்குழுமங்களுக்கிடையிலான மோதல்களில் கடந்தாண்டு சில நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருந்தனர்.

இந்நிலையில், அருகிலுள்ள கிராமங்கள் இரண்டில் 34 துராக் நாடோடிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டதாக மேனக நகர மேயர் நனெளட் கொடியா தெரிவித்துள்ளார். சில மோட்டார்சைக்கிள்களில் வந்த ஆயுதந்தரித்த நபர்கள், குறித்த கிராமங்களை சுற்றிவளைத்து மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக நனெளட் கொடியா கூறியுள்ளார்.

குறித்த இதே பகுதியில் கடந்த மாத நடுப்பகுதியில் துராக் நாடோடிகள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்ததுடன் மாலியின் மத்திய மொப்டி பிராந்தியத்தில் புலானி மேய்ச்சல்காரர்கள் 15 பேர் கடந்த மாதம் கொல்லப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X