2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘48 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அரசாங்கம் தோற்று விட்டது’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

48 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் செய்யாததை, 48 மாதங்களில் தாங்கள் செய்துள்ளோம் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுச்சேரி ஆரோவில் பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (25) வெளிட்டார். இதன்பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இது, சித்தர்கள் வாழ்ந்த பூமி. ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தமிழில் பேச ஆரம்பித்த அவர், “கடந்த 50 ஆண்டுகளாக, ஆரோவில் சிறந்த சமூக, கலாசார, ஆன்மிகப் பணிகளை ஆற்றி வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது, சுனாமி வந்தபோது, என இரண்டுமுறை போராடியவர்கள், புதுச்சேரி மக்கள். புண்ணிய பூமியான புதுச்சேரியில் வாழும் நீங்கள் பாக்கியசாலிகள்” என்று புகழ்ந்துப் பேசினார்.

“காஞ்சியையும் காசியையும் தன் கவிதையின் மூலம் இணைத்தவர் மகாகவி பாரதியார். புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள், மண்ணுக்கு அநியாயம் இழைத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் இளைஞர்கள் பெண்கள் முன்னேறுவதற்கான சூழல் நிலவுகிறதா? இங்கு ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறதா? புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன.

“48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை, 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம்” என்று அவர் கூறினார். “நாடுமுழுவதும் போக்குவரத்துத் துறை நவீனமயமாகிவரும் நிலையில், புதுச்சேரியில் மாறான நிலை. ஒரு காலத்தில், இங்கு செழிப்பாக இருந்த ஜவுளித்துறை, தற்போது நெருக்கடியிலுள்ளது. புதுச்சேரியில் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்து விட்டன.

புதுச்சேரி மாநிலப் பின்னடைவுக்கு, காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும். நாம் முன்னேறுவதில், அரசாங்கம் செயற்படும் விதத்திலே, என்ன குறையுள்ளது என்பதைச் சிந்திக்க வேண்டும்” என்று இதன்போது அவர் கூறியிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .