2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய ஈரான் விமானம்

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் தலைநகரிலிருந்து, 66 பயணிகளை சுமந்தபடி சென்ற ஈரான் விமானம், நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதால், அதில் பயணித்த அத்தனை பயணிகளும் விபத்தில் பலியானதாக ஈரான் அசு அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள் ரேடாரை விட்டு விலகியுள்ளது.

ரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்க முயற்சித்தமை தெரியவந்தது. இருப்பினும், ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் நொறுங்கி விழுந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால், ​தேடுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் படி உள்ளது.

விமானத்தில் பயணித்த 66 பேரும் பலியானார்கள் என்று கூறப்படும் அதேவேளை, ஈரானின் மூன்றாவது மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானமே விபத்துக்குள்ளானது என்றும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .