2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

712 அகதிகள் மீட்பு

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பந்தரிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 712 பேரை, லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அண்மையிலுள்ள கடற்கரையோரத்தில், அயர்லாந்துக் கடற்படையினர் மீட்டுள்ளனர் என, அயர்லாந்து பாதுகாப்புப் படைகள், நேற்றுத் தெரிவித்தன. சர்வதேச குடியேற்றவாசிகள் மீட்புத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை, திரிபோலிக்கு வடமேற்காக 40 கிலோமீற்றர் தூரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உட்பட 6 பேர், நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில், கர்ப்பந்தரிந்த 14 பெண்களும் 4 மாதத்துக்குக் குறைவான 4 குழந்தைகளும் உள்ளடங்குகின்ற நிலையில், மீட்கப்பட்ட அனைவருமே, பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு, பின்னர் இத்தாலி அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர்.

இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அயர்லாந்துத் தளபதி பிரையன் ஃபிற்ஸ்கெரால்ட், “எந்த உயிரிழப்புகளும் ஏற்படாமல், அனைத்து உயிர்களும் மீட்கப்பட்ட என, பெருமையாகக் கூற முடியும். எட்டு மணிநேரப் போராட்டத்தின் ஒவ்வொரு தடவையும், உயிர்களின் பாதுகாப்பு, கேள்விக்குரியதாக இருந்தது” என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X