2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அல் கொய்தா சிரேஷ்ட தலைவர் அல் மஸ்ரியை கொன்ற ஆப்கானிஸ்தான் படைகள்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (எஃப்.பி.ஐ) மிகவும் வேண்டப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிருந்த அல் கொய்தா சிரேஷ்ட தலைவரொருவரான அபு முஹ்சின் அல்-மஸ்ரியை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொன்றதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் டுவீட்டொன்றில் நேற்று  இரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அல்-மஸ்ரியின் இறப்பை ஐ. அமெரிக்க தேசிய பயங்கரவாத்துக்கெதிரான நிலையத்தின் தலைவர் கிறிஸ் மில்லர் அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அல் கொய்தாவின் இரண்டாவது கட்டளைத் தளபதியாக நம்பம்படும் அல்-மஸ்ரி, கஸ்னி மாகாணத்தில் இடம்பெற்ற சிறப்பு நடவடிக்கையொன்றில் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .