2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பின் தேவையில்லாமல் அந்நாட்டின் சோஷலிச வேட்பாளரான லூயிஸ் அர்சே ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார் என உத்தியோகபூர்வமற்ற வாக்கெண்ணிக்கை நேற்று வெளிப்படுத்துகையில், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி இவோ மொராலெஸின் இடதுசாரிக் கட்சி பதவிக்குத் திரும்புவதை அண்மித்துள்ளது.

சிஸ்மோரி கருத்துக்கணிப்பால் மேற்கொள்ளப்பட்ட துரித வாக்கு எண்ணிக்கை பொலிவிய தொலைக்காட்சி அலைவரிசை யுனிட்டெல்லால் நேற்று நள்ளிரளவில் வெளியிடப்பட்டதில் லூயிஸ் அர்சே 52.4 சதவீதமான வலிதான வாக்குகளைப் பெற்று, வலதுசாரிக் கொள்கைகளுக்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கும் இடையேயான கொள்கைகளைக் கொண்ட தனது போட்டியாளரான 31.5 சதவீதமான வாக்குகளைக் கொண்ட கார்லோஸ் மெஸாவை விட 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று காணப்படுகின்றார்.

வேட்பாளரொருவர் முதலாவது சுற்று வாக்களிப்பிலேயே வெற்றி பெறுவதற்கு 40 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவதுடன், எதிரணி வேட்பாளரை விட 10 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கீழ் முன்னாள் பொருளாதார அமைச்சராக லூயிஸ் அர்சே காணப்பட்டிருந்தார்,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X