2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

COVID-19-இலிருந்து குணமடைந்த நோயாளிகளை இரத்ததானமளிக்க வலியுறுத்தல்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் COVID-19-இலிருந்து குணமடைந்த நோயாளிகளை இரத்ததானமளிக்க சீன சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

COVID-19-இலிருந்து குணமடைந்த நோயாளிகளின் பிளாஸ்மாவில் இருக்கும் தடுப்பு மருந்தானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இருக்கும் வைரஸ் தாக்கத்தை குறைக்க உதவும் என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் சீன தேசிய சுகாதார ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சீன தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி 12,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், COVID-19-ஆல் மேலும் 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,868ஆக இன்று உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில், COVID-19-இன் மய்யமான ஹுபெய் மாகாணத்திலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சீனாவின் ஏனைய பகுதிகளில் ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று COVID-19-ஆல் தொற்றுக்குள்ளாகிய புதிய 1,886 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ல நிலையில் மொத்தமாக ஏறத்தாழ 72,500 பேர் COVID-19ஆல் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X