2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘Go’ சொன்ன ‘GoDaddy’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேர்ஜினியா முறுகலில் கொல்லப்பட்ட பெண் தொடர்பாக, தவறான, இழிவுபடுத்தும் செய்தியை வெளியிட்ட இணையத்தளம் ஒன்றுக்கு, பிரபல இணைய வழங்கி நிறுவனமான GoDaddy, கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது. டெய்லி ஸ்டோமர் என்ற, நவ நாஸிஸ, வெள்ளையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இணையத்தளமே, இவ்வாறு சிக்கியுள்ளது. ஹீதர் ஹேயர் தொடர்பான செய்தியை வெளியிட்ட அந்நிறுவனம், அவரின் உடல் வடிவமைப்பை இழிவாகக் குறிப்பிட்டதோடு, அவரின் நடத்தை தொடர்பாகவும் கேள்வியெழுப்பியிருந்தது. தவிர, அவரிடம், வெள்ளையின ஆண்களுக்கு எதிரான நிலைப்பாடும் காணப்பட்டது என்று கூறியது. இதைத் தொடர்ந்து, குறித்த இணையத்தளத்துக்கான வழங்கியாகச் செயற்படும் GoDaddy நிறுவனத்திடம், குறித்த இணையத்தளத்தைத் தொடர்ந்தும் அதன் நிறுவன வழங்கியில் வைத்திருப்பதற்கு, பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

அழுத்தங்களைத் தொடர்ந்து பதிலளித்த GoDaddy, குறித்த இணையத்தளத்தை, தமது இணைய வழங்கியிலிருந்து அகற்றி, வேறு வழங்கியில் வைப்பதற்கு, அவர்களுக்கு 24 மணிநேரங்கள் வழங்கப்பட்டுள்ளன என அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X