2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரெஞ்சுத் தயாரிப்புகளை நீக்கிய குவைத் விற்பனையாளர்கள்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செச்சினியா பதின்ம வயதானவரால் தலை துண்டிக்கப்பட்ட ஆசிரியரின் பிரெஞ்சுப் பாடசாலை ஒன்றில் கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டுக்காக நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை பயன்படுத்தியது தொடர்பில் புறக்கணிப்பாக குவைத் சில்லறை விற்பனையாளர்கள் கூட்டுறவானது பிரெஞ்சுத் தயாரிப்புக்களை நீக்கியுள்ளது.

இந்நிலையில், அரபுலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான சவுதி அரேபியாவில் பிரெஞ்சு பல்பொருளங்காடி சில்லறை விற்பனையாளர் கர்ரென்ஃபோரைப் புறக்கணிப்பதற்கு அழைப்பு விடுக்கும் ஹஷ்டக்கானது நேற்று  ட்ரென்டிங்கில் இரண்டாமிடத்தில் இருந்தது.

இச்சந்தர்ப்பத்தில், பிரெஞ்சுத் தயாரிப்புகளை குறிப்பாக உணவுத் தயாரிப்புகளை புறக்கணிக்கும், கேலிச்சித்திரங்கள் தொடர்பில் பிரான்ஸுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளும் சில மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படுவதாக பிரான்ஸின் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதவிர, புறக்கணிப்பதற்கான இந்த அழைப்புகள் அடிப்படையற்றவை எனவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், தீவிர சிறுபான்மையொன்றால் முன்தள்ளப்படுகின்ற தமது நாட்டுக்கெதிரான அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டுமென மேலும் வெளிநாட்டமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பிரெஞ்சு நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும், பிரெஞ்சுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இவ்வாறான புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கெதிராக அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .