2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வியட்நாம் முகாம்களை நிலச்சரிவு தாக்கியது: 14 பேர் பலி; எட்டுப் பேரை காணவில்லை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய வியட்நாமில் இன்று அதிகாலை நிலச்சரிவுவொன்றில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், எட்டுப் பேரைக் காணவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வியட்நாமின் மத்திய மாகாணமான குவாங் ட்ரியிலுள்ள  அந்நாட்டின் நான்காவது இராணுவப் பிராந்தியத்தின் பிரிவொன்றின் முகாம்களை நிலச்சரிவு தாக்கியதாக தமது இணையத்தளத்தில் அறிக்கையொன்றில் வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த மாகாணத்துக்கு அருகிலுள்ள மாகாணமான துவா தியென் ஹுயெயிலல் இன்னொரு நிலச்சரிவில் பெரும்பாலாக படைவீரர்கள் உள்ளடங்கலாக 13 பேர் கொல்லப்பட்ட சில நாள்களிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

14  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எட்டுப் பேரை இன்னும் காணவில்லை என வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இம்மாத ஆரம்பம் முதலான தீவிரமான மழை வீழ்ச்சி காரணமாக மோசமான வெள்ளம் ஏற்பட்டதுடன், 80 பேர் மத்திய வியட்நாமில் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்த சில நாள்களில் மேலும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .