2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இவ்வாண்டில் 6,000 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறத்தாழ 6,000 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் நேற்று தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரையில் 5,939 பொதுமக்கள் மோதல்களில் பாதிப்படைந்துள்ளதாக அறிக்கையொன்றில் ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவி நடவடிக்கை தெரிவித்துள்ளது. 2,117 பேர் கொல்லப்பட்டதுடன் 3,822 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்புகள் 30 சதவீதம் குறைவென்கின்றபோதும், ஆப்கான் அரசாங்க பேரம்பேசுநர்களுக்கும், தலிபானுக்குமிடையே கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த மாதம் ஆரம்பித்த பேச்சுக்கள் வன்முறையைக் குறைப்பதில் தோல்வியடைந்துள்ளதாக குறித்த நடவடிக்கை தெரிவித்துள்ளது.

45 சதவீதமான பொதுமக்கள் பாதிப்ப்புகளுக்கு தலிபான் பொறுப்பெனவும், அரசாங்கப் படைகள் 23 சதவீதமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான சர்வதேசப் படைகள் இரண்டு சதவீதமான பாதிப்புகளுக்கு பொறுப்பு என குறித்த நடவடிக்கை குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .