2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சிந்து மாகாண பொலிஸ் தலைவர் கடத்தப்பட்டதில் விசாரணைக்கு பாக். இராணுவம் உத்தரவு

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் சிந்து மாகாண முன்னணி பொலிஸ் அதிகாரியான முஷ்டாக் அஹ்மட் மஹர் கடத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக விசாரணையொன்றுக்கு அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டதாக இராணுவத்தின் பொதுத் தொடர்பாடல்கள் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரொருவரான முஹமட் சஃப்டாரை கைது செய்வதற்கான ஆணையொன்றை வற்புறுத்தி கைச்சாத்திட வைத்து முஷ்டாக் அஹ்மட் மஹர் நேற்று முன்தினம் துணை இராணுவக் குழுக்களால் கடத்தப்பட்டதாக உள்ளூர் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்ற நிலையிலேயே குறித்த விசாரணையானது இராணுவத் தளபதி குவாமர் ஜாவீட் பஜ்வாவால் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத் தலைநகர் கராச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் உறுப்பினரொருவரான முஹமட் சஃப்டார் கடந்த நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப்பின் மருமகவே முஹமட் சஃப்டார் ஆவார்.

பொலிஸ் தலைவரின் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவர் பிரிவுத் தளபதியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கைதாணைகளில் கையொப்பமிடுமாறு கோரப்பட்டதாக முஹமட் சஃப்டாரின் மனைவியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் மகளுமான மரியம் நவாஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

கைதாணையில் கைச்சாத்திட்ட பின்னர் முஷ்டாக் அஹ்மட் மஹர் வெளியேற நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .