2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரான்ஸிலிருந்து தூதுவரை வாபஸ் பெறுமாறு பாகிஸ்தான் நாடாளுமன்றம் வலியுறுத்தல்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டது தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் தூதுவரை பிரான்ஸிலிருந்து மீள அழைக்கக்கோரி பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானமொன்றை பாகிஸ்தான் நாடாளுமன்றமானது நேற்று  நிறைவேற்றியதுடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை முஸ்லிம்களுக்கெதிராக விமர்சிப்பவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திலுள்ள பிரெஞ்சுத் தூதுவர், பாகிஸ்தானிலுள்ள வெளிநாட்டலுவலகத்துக்கு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அழைக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த தீர்மானமானது ஏனைய முஸ்லிம் நாடுகளை பிரெஞ்சுத் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறும் பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .