2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜப்பான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் யொஷிஹிடே சுகா

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானின் பிரதமராக இன்று யொஷிஹிடே சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் பிரதம அமைச்சரவைச் செயலாளராகக் கடமையாற்றியிருந்ந்த யொஷிஹிடே சுகா, தான் தலைமை வகிக்கும் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற கீழ்ச்சபையில் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் அமைச்சரவையில் பழக்கமான அரைவாசி முகங்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையொன்றை பிரதமர் யொஷிஹிடே சுகா நியமித்துள்ளார்.

அமைச்சரவையில் இருவரே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதுடன், 71 வயதான யொஷிஹிடே சுகாவை உள்ளடக்குகையில் அமைச்சரவையின் சரசாரி வயது 60 ஆகும்.

நிதியமைச்சர் தாரோ அஸோ, வெளிநாட்டமைச்சர் டொஷிமிட்ஷு மொடெகி, ஒலிம்பிக் அமைச்சர் செய்கோ ஹஷிமோட்டோ, இளையவரான 39 வயதான சுற்றுச்சூழல் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸுமி உள்ளிட்டோர் பதவிகளைத் தக்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இளைய சகோதரரான நொபுவாவோ கிஷிக்கு பாதுகாப்பமைச்சு அளிக்கப்பட்டுள்ளதோடு, முன்னாள் பாதுகாப்பமைச்சர் தாரோ கொனோ நிர்வாகச் சீர்திருத்த பொறுப்பை எடுத்துள்ளார்.

கொவிட்-19 பதிலளிப்புக்கு முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டிக் காட்டிய யசுடோஷி நிஷிமுரா பொருளாதர அமைச்சராகத் தொடருகின்றார். தவிர முன்னாள் சுகாதார அமைச்சரும் பிரதமர் யொஷிஹிடே சுகாவின் நெருங்கியவருமான கட்சுனொபூ கட்டோ, பிரதம அமைச்சரவைச் செயலாளயாகியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .