2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சீன வங்கிக் கணக்கொன்றை பேணும் ட்ரம்ப்’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன வங்கிக் கணக்கு ஒன்றைக் கொண்டிருப்பதாக ஒத்துக் கொண்டதாக நியூ யோர்க் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் இன்டர்நஷனல் ஹொட்டல்ஸ் மனேஷ்மன்டால் கட்டுப்படுத்தப்படும் குறித்த கணக்கானது 2013ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்குமிடையில் உள்நாட்டு வரிகளைச் செலுத்தியுள்ளது.

ஆசியாவில் ஹொட்டல் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் குறித்த கணக்கானது உருவாக்கப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் ஐக்கிய அமெரிக்க நிறுவனங்கள் வியாபரம் செய்வதை விமர்சிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போரொன்றை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட, நிறுவன நிதியியல் தகவல்களை உள்ளடக்கிய வரி விபரங்களை பெற்றதையடுத்தே குறித்த கணக்கை நியூ யோர்க் டைம்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .