2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய அரசாங்கத்தில் மொராலெஸுக்கு வகிபாகமில்லை’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதியான இவோ மொராலெஸுக்கு புதிய அரசாங்கத்தில் எவ்வித வகிபாகமுமில்லை என அந்நாட்டில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள லூயிஸ் ஆர்சே நேற்று தெரிவித்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவிலுள்ள இவோ மொராலெஸ், லூயிஸ் ஆர்சேயின் சோஷலிசத்தை நோக்கிய முன்னணிக் கட்சியின் தலைவராகக் காணப்படுகின்ற நிலையில், அவரது தாக்கமானது இந்நிலையில் கட்டுப்படுத்தப்படும் என லூயிஸ் ஆர்சே கூறியுள்ளார்.

இதேவேளை, எப்போது விரும்பினாலும் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸ் பொலிவியாவுக்குத் திரும்பலாம் என லூயிஸ் ஆர்சே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கீழ் பொருளாதார அமைச்சராக லூயிஸ் ஆர்சே காணப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .