2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அகதிகளை அனுமதிக்கிறது ஐ.அமெரிக்கா

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக ஆபத்துள்ள நாடுகள் என அடையாளங்காணப்பட்டு, அகதிகள் உள்வருவதற்கு ஐக்கிய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளைச் சேர்ந்த அகதிகளை உள்வாங்கும் நடவடிக்கையை, ஐ.அமெரிக்கா மீள ஆரம்பிக்கவுள்ளது.

எகிப்து, ஈரான், இராக், லிபியா, மாலி, வடகொரியா, சோமாலியா, தென்சூடான், சூடான், சிரியா, யேமன் ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகளை உள்வாங்குவதற்கே, ஐ.அமெரிக்கா இடைக்காலத்தடை விதித்திருந்தது.

எனினும், 90 நாட்கள் நீடித்த அத்தடை முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, மேலதிக சோதனைகளின் பின்னர், அவர்களை அனுமதிப்பதற்கு, ஐ.அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.

வழக்கமான அகதிகளை விட, இவர்களுக்காக மேலதிகமாக என்னவாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களை வெளியிட, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X