2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அகதிகள் தொடர்பில் ஆராய ஒன்றுகூடுகிறது ஐ.ஒன்றியம்

Editorial   / 2018 ஜூன் 22 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதிக் கோரிக்கையை முன்வைத்த குடியேற்றவாசிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் சுதந்திரமாகச் செல்ல முடியுமான நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஆராய்வதற்காக, ஒன்றியத்தின் தலைவர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24), பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில் ஒன்றுகூடவுள்ளனர்.

இரண்டாவது உலகப் போரின் பின்னர், மாபெரும் குடியேற்றவாதப் பிரச்சினையை, ஐ.ஒன்றியம் எதிர்கொண்ட நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்னர், இது தொடர்பில் ஐ.ஒன்றியம் இணைந்து செயற்பட்டிருந்தது. ஆனால், குடியேற்றவாசிகளின் பிரச்சினை, ஒன்றியத்துக்குள் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைநர் ஜோன் கிளாட் ஜங்கர், இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், மோல்ட்டா, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இதுவரை தங்கள் பங்குபற்றுதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல், இத்தாலி, கிரேக்கம், ஒஸ்திரியா, பல்கேரியா ஆகிய நாடுகளிலும், இக்கூட்டத்தில் பங்குபற்றவுள்ளன.

ஐ.ஒன்றியத்தின் அகதிகள் தொடர்பான கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது தொடர்பாக, ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும், எதிர்வரும் 28ஆம் திகதி சந்திக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், கடும்போக்கு வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், குடியேற்றவாசிகள் தொடர்பான கொள்கைகள், மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளன. எனவே தான், அவசரமான கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைமைக்கு, ஐ.ஒன்றியம் தள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X