2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அங்கெலா மேர்க்கெலுக்கு 2 வாரங்கள் காலக்கெடு

Editorial   / 2018 ஜூன் 20 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலுக்கு, அவரது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியால், இரண்டு வாரகால காலக்கெடு விதிக்கப்பட்டு, அக்காலத்துக்குள், குடியேற்றவாசிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வாரங்கள், மேர்க்கெலுக்கு நன்மையாக அமைந்தாலும், அவர் மீதான அழுத்தங்கள் இன்னமும் காணப்படுகின்றன என்பதையே இது காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள இன்னொரு நாடொன்றில் பதிவுசெய்யப்பட்ட குடியேற்றவாசி ஒருவர், ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுவதைத் தடைசெய்ய வேண்டுமென்பதே, மேர்க்கெலிடம் முன்வைக்கப்பட்டுள்ள நிலைப்பாடாகும். அவ்வாறான தடையை விதிப்பதற்கு, மேர்க்கெல் விரும்பவில்லை.

அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சி, இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறவுள்ள பிராந்தியத் தேர்தலில், புதிய வலதுசாரிக் கட்சியிடம் தனது வாக்குகளை இழப்பதற்கு முன்பதாக, இவ்விடயத்தில் தீர்வு காண விரும்புகிறது. அக்கட்சியின் தலைவர் ஹோர்ஸ்ட், நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். தமது கட்சி விரும்பும் மாற்றத்தை, தானாகவே கொண்டுவரும் அதிகாரத்தை அவர் கொண்டிருக்கிறார். ஆனால், அமைச்சராக அவர், ஏதேச்சாதிகார முறையில் செயற்படக்கூடாது என, மேர்க்கெல் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் தான், இப்பிரச்சினைக்கான தீர்வை, ஐரோப்பிய மட்டத்தில் காணுமாறு, மேர்க்கெலுக்குக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இவ்வாறான முரண்பாடுகள் காணப்படும் நிலையில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், இது தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கெலா மேர்க்கெலின் திறந்த எல்லைக் கொள்கை, பாரிய தவறு எனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக, ஐரோப்பா முழுவதும், குற்றங்கள் மலிந்துள்ளன எனக் குறிப்பிட்டார். ஆனால், ஜேர்மனியால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின் அடிப்படையில், கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் மீண்டும் இணைந்த பின்னர், அந்நாட்டில் குற்றம் மிகக்குறைவாக் காணப்படும் காலப்பகுதியாக, தற்போதைய காலப்பகுதியே அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X