2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அணு ஆபத்தை வடகொரியா கொண்டிருக்கவில்லை’

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா அணு ஆபத்தை இனியும் கொண்டிருக்கவில்லையென்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு அது மிகப் பெரிய, மிக அபாயகரமான பிரச்சினையல்ல என சிங்கப்பூரில் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னைச் சந்தித்த பின்னர் ஐக்கிய அமெரிக்கா திரும்பிய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தெரிவித்தார்.

மேலும் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், தான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாளை விட மேலும் பாதுகாப்பாக ஒவ்வொருவரும் தற்போது உணரலாம் என்று கூறியதுடன், வடகொரியாவிலிருந்து இனியும் அணு ஆபத்தில்லை. கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பு ஆர்வமிக்கதாகவும் மிகவும் நேர்மறையாகவும் அமைந்தது. வடகொரியா சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.

கிம்முடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், வடகொரியாவுக்கெதிரான பொருளாதாரத் தடைகளை நீக்க தான் விரும்புவதாகவும் ஆனால் அது உடனடியாக நடைபெறாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பு வெற்றிகரமானது எனப் புகழ்ந்துள்ள வடகொரிய அரச ஊடகம், ஐக்கிய அமெரிக்க – தென்கொரிய இராணுவப் பயிற்சிகளை இடைநிறுத்துவதற்கான தனது எண்ணப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தினார் எனக் கூறியதுடன், வடகொரியாவுக்கு பாதுகாப்பு உறுதிகளையும் வழங்கினாரெனவும் கூறியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில், தென்கொரியாவுடனான என்ன இராணுவ ஒத்துழைப்பை இடைநிறுத்த ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்தார் என சந்தேகங்கள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி ட்ரம்பின் குறித்த அறிவிப்பின் பின்னர் உடனே நேற்றுக் கருத்துத் தெரிவித்த தென்கொரியாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க படைகளின் பேச்சாளரொருவர், இணைந்த இராணுவ ஒத்திகளை இடைநிறுத்துவதற்கான எந்த அறிவிப்புகளையும் தாங்கள் பெறவில்லையென்று கூறியிருந்தார்.

எவ்வாறெனினும் குறித்த விடயம் தொடர்பாக, ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்டிஸுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிம்முடனான சந்திப்பில் அதிகமானவற்றை ஜனாதிபதி வழங்கி விட்டார் என ஐக்கிய அமெரிக்காவிலுள்ள விமர்சகர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .