2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அணு ஒப்பந்தத்தை மீளக் கொண்டு வருவதற்கான காலம் முடிவடைகிறது’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 15 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானின் அணு ஒப்பந்தத்தை மீளக் கொண்டு வருவதற்கு விரைவாக ஐக்கிய அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று முன்தினம் தெரிவித்துள்ள ஈரானிய வெளிநாட்டமைச்சர் ஜாவாட் ஸரிஃப், ஏனெனில் ஈரானின் ஜனாதிபதித் தேர்தல் காலம் ஆரம்பித்த பின்னர், இவ்வாண்டுயிறுதிவரை பெரும்பாலானவை நடைபெறச் சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, தடைகளை அகற்றி ஐ. அமெரிக்கா முதலில் அணு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்ற ஈரானின் நீண்ட காலக் கொள்கையை ஸரிஃப் மீளக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பியர்கள் இணக்கத்துக்கு வந்ததாகவும், ஈரானும், ஐ. அமெரிக்காவும் இணக்கத்துக்கு வரவில்லை எனவும், அமெரிக்கர்கள் வலிந்து திணிப்பதாகவும், தாங்கள் அதைத் தடுப்பதாகவும் தெரிவித்துள்ள ஸரிஃப், தாங்கள் இணக்கத்துக்கு வந்து அணு ஒப்பந்தத்துக்கு வருவதா அல்லது தங்கள் வழிகளில் செல்வதா எனத் தீர்மானிப்பதற்கான நேரமிது எனக் கூறியுள்ளார்.

ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உச்சபட்ச அழுத்தக் கொள்கைக்கும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்துக்கும் எதுவித மாற்றத்தையும் தான் காணவில்லையென ஸரிஃப் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .