2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவோம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில், பனிப்போர் காலத்தில், அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை, ஐ.அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என, ஐ.அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான முடிவை ஐ.அமெரிக்கா எடுத்த பின்னர், ரஷ்யாவுக்கு விஜயம் செய்த போல்ட்டன், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் வெளிநாட்டு அமைச்சரையும் சந்தித்தோடு, பின்னர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் சந்தித்திருந்தார்.

இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக, ஐ.அமெரிக்காவின் முடிவு மாற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்டாலும், தமது முடிவில் உறுதியாக இருப்பதாக, போல்ட்டன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X