2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அணுவாயுதங்களைக் கைவிடவே கிம் எதிர்பார்க்கிறார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பில், உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளார் என, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், பிரான்ஸ் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அத்தோடு, கிம்மின் இந்நிலைப்பாட்டுக்காக, சர்வதேச சமூகம், அவருக்கு வெகுமதிகளை அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும், இவ்வாண்டு ஜூனில், சிங்கப்பூரில் வைத்துச் சந்தித்தனர். இதன்போது, அணுவாயுதங்களைக் கைவிடுவதாக, கிம் உறுதியளித்தார். ஆனால், அதற்கான கால எல்லை, எவ்வாறு அதை மேற்கொள்வது உள்ளிட்ட எந்த விடயங்களும், இதன்போது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, உண்மையிலேயே அணுவாயுதவழிப்பு இடம்பெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மூன், அணுவாயுதமழிப்புத் தொடர்பில், கிம்முடன், பல மணிநேரங்களாக உரையாடியுள்ளதாகத் தெரிவித்ததோடு, இவ்வுரையாடல்கள் மூலமாக, அணுவாயுதமழிப்பு விடயத்தில், உறுதியான நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரியத் தீபகற்பத்தில் சமாதான நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, எதுவிதமான அணுவாயுத அல்லது ஏவுகணைச் சோதனைகளை, இவ்வாண்டில் வடகொரியா மேற்கொண்டி ருக்கவில்லை. ஆனால், புங்கியே-றி என்ற அணுவாயுதத் தளத்தை அழிக்கும் போது, வாக்குறுதியளித்த படி, சர்வதேசக் கண்காணிப்பாளர்களை, வடகொரியா அனுமதித்திருக்கவில்லை. எனவே அது, நிரந்தரமான அழிப்பாக இருக்காது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், கிம், உண்மையாகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் இருக்கிறார் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மூன், சர்வதேச சமூகத்தால் தொடர்ந்தும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவது குறித்து, கிம் வெறுப்படைந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .