2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமெரிக்கத் தூதுவருக்கு விமர்சனம்

Editorial   / 2018 மார்ச் 22 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலுக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவரை, “நாயின் மகன்” என, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் விமர்சித்துள்ளார். மேற்குக் கரையில், இஸ்ரேலியக் குடியேற்றங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதன் காரணமாக, இவ்விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.

மேற்குக் கரையில் மேற்கொள்ளப்படும் இஸ்‌ரேலியக் குடியேற்றங்கள், சட்டவிரோதமானவை என்ற, பொதுவான உலகப் பார்வை உள்ள போதிலும், “தமது நிலங்களிலேயே அவர்கள் குடியேறுகின்றனர்” என, ஐ.அமெரிக்கத் தூதுவர் அக்குடியேற்றங்களை நியாயப்படுத்துகிறார் என, ஜனாதிபதி அப்பாஸ் விமர்சித்தார்.

பலஸ்தீனத் தலைமைத்துவச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதைக் கூறினார். அத்தோடு, பலஸ்தீனப் பிரதமர் மீது, கடந்த வாரம் காஸாவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு, ஹமாஸெ பொறுப்பு எனவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .