2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 இலட்சத்தை கடந்தது

Editorial   / 2020 மே 17 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 இலட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. 

குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்தது. 

இதுவரை 15,07,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,089 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி 89,596 ஆக உயர்ந்தது. இதுவரை 3,39,211 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

அதிக பாதிப்புகளில், அமெரிக்காவுக்கு அடுத்த இடங்கள் முறையே, ஸ்பெயின்(2,76,505), ரஷ்யா(2,72,043), பிரிட்டன்(2,40,161), பிரேசில்(2,33,142) நாடுகள் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X