2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அயர்லாந்து எல்லை தொடர்பில் பேரம்பேச முடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான ஒப்பந்தத்தை மீளவும் பேரம்பேசுவதற்கான காலம் போதாது எனவும், மீண்டும் பேரம்பேசுவதற்குத் தயாராக இல்லையெனவும், ஐ.இராச்சியத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் அறிவித்துள்ளது. அயர்லாந்து எல்லை தொடர்பிலேயே பிரதான கருத்து வேறுபாடு காணப்படும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தைக் காண்பதற்குப் போதிய காலமில்லையெனவும், ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் விலகுவற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஏற்கெனவே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீளப் பேரம்பேசுவதற்குப் பிரதமர் தெரேசா மே-க்குப் பணித்து, ஐ.இராச்சிய நாடாளுமன்றம் வாக்களித்திருந்தது.

வாக்களிப்பு முடிவடைந்தவுடனேயே, பேரம்பேசல்களுக்கான மறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்த நிலையில், இப்போது மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரெக்சிற் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசல் அதிகாரியான மைக்கல் பார்னியர் கருத்துத் தெரிவிக்கும் போது, பிரெக்சிற் ஒப்பந்தம் உறுதியானது எனத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் மறுக்கின்ற நிலையில், ஒப்பந்தமேதுமின்றி வெளியேறப் போவதாக, பிரதமர் மே, எச்சரிக்கை வழங்க முடியும். ஆனால், இதுவரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வெளியான அனைத்துக் கருத்துகளும், வெளிப்படையாகவும் நேரடியாகவும், மேலதிகப் பேரம்பேசல்களுக்குத் தயாராக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றன. எனவே, பிரதமர் மே, தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .