2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரச படைகளால் அட்டூழியம் என ஐ.நா குற்றச்சாட்டு

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் பென்காசி நகரில், இரட்டைக் கார்க்குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்தில், சந்தேகநபர்கள் வைத்துப் படுகொலை செய்யப்படுகின்றனர் என, லிபியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த இடத்தில், குறைந்தது 9 பேர் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே, இந்தக் கண்டனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கொலை செய்யும் பாணியிலான தண்டனை வழங்கலில் ஈடுபடுபவரை, விசேட படைகளின் தளபதியான மஹ்மூட் அல்-வெர்பலி என, ஐ.நா அடையாளங்காட்டியது. இவ்வாறான கொலைகளைப் புரிந்த காரணத்தால், மஹ்மூட் அல்-வெர்பலி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் நபராவார்.

2017ஆம் ஆண்டில் மாத்திரம், இவ்வாறான 5 சம்பவங்கள் தொடர்பாகத் தேவைப்படும் மஹ்மூட்டை, உடனடியாக ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டுமென, ஐ.நா கோரியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டுமென, ஐ.நா மேலும் குறிப்பிட்டது.

சமூக ஊடக இணையத்தளங்களில் வெளியான புகைப்படங்களில், இராணுவ உடையில் காணப்படும் நபர், பள்ளிவாசலுக்கு முன்னால் வைத்து, சுட்டுக் கொல்வது போன்று வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இன்னொரு புகைப்படத்தில், அங்கு காணப்பட்டவர்களில் மூவரைத் தவிர ஏனைய அனைவரும், நிலத்தில் முன்பக்கமாக வீழ்ந்து கிடப்பதாகக் காண்பிக்கப்பட்டது.

மஹ்மூட் அல்-வெர்பலி, சர்வதேச நீதிமன்றத்தால் தேடப்படுகிறார் என, கடந்தாண்டு ஓகஸ்டில் அறிவிக்கப்பட்ட பின்னர், அவரை விசாரணை செய்து வருவதாக, லிபிய தேசிய இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கவில்லை. தற்போது அவர் மீண்டும் தென்பட்டுள்ளமை, இராணுவத்தின் உண்மைத்தன்மை தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X