2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசாங்கத்தை அமைத்தது லெபனான்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷியாக் குழுவான ஹிஸ்புல்லாவும், அதன் நட்புறவுவாளர்களும் பொருளாதார நெருக்கடியை அவசரமாக கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டிய அமைச்சரவையொன்றுக்கு இணங்கியதையடுத்து, லெபனான் பிரதமர் ஹஸன் டியப்பின் கீழ் புதிய அரசாங்கமொன்றை லெபனான் நேற்று  அமைத்துள்ளது.

அரசியல்வாதிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களால் கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் சாட் அல்-ஹரிரி பதவி விலகியதைத் தொடர்ந்து அரசாங்கமில்லாமல் மிகுந்த கடனாளியாகவுள்ள லெபனான் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், வங்கிகளில் டொலர்களுக்காக மக்களைக் கெஞ்ச வைத்துள்ள, அவர்களது இருப்புகள் குறித்து அச்சப்பட வைத்துள்ள எதிர்பார்க்க முடியாத நிலையிலிருந்து பாதுகாப்பதற்கு லெபனானிக்கு வெளிநாட்டு உதவி தேவைப்படுவதாக புதிய நிதியமைச்சர் கஸி வஸ்னி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், கட்சிகளால் ஆதரவளிக்கப்படும் 20 சிறப்பு அமைச்சர்களைக் கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அரசாங்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் வீதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்திருந்தனர். நாடாளுமன்றத்துக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட தடுப்புவேலிகளை விலக்க முயன்ற கற்களை எறிந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .