2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய சிரியப் படைகள்

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள வடமேற்கு அலெப்போ மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசாங்கப் படைகள் நேற்றுக்  கைப்பற்றியதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அலெப்போ மாகாணத்தில் கடும் விமானத் தாக்குதல்களை ரஷ்ய போர்விமானங்கள் நேற்று  நடத்தியதோடு, அனடான் உள்ளிட்ட நகரங்களின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்நிலையில், அனடானது பின்னர் ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஆயுதக்குழுக்களால் ஆதரவளிக்கப்படும் சிரியப் படைகளால் பின்னர் கைப்பற்றப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, அனடன், ஹரிதன் உள்ளிட்ட நகரங்களை உள்ளடங்கலான பகுதிகளிலிருந்தி எதிரணிப் போராளிகள் வெளியேறியதாக எதிரணி இராணுவத் தகவல்மூலங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், எட்டு ஆண்டுகளாக அவர்களால் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாத பகுதியொன்றை முதலாம் நாளில் அவர்கள் கைப்பற்றியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் றமி அப்துல்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அப்பிரதேசத்தில் சிரிய அரசாங்கத்தால் மிகவும் வேகமான நகர்வொன்று எனக் குறிப்பிட்ட றமி அப்துல் ரஹ்மான், பெரும்பாலான பகுதிகளிலிருந்து பிரிவுகள் வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் 13 நகரங்களையும், கிராமங்களையும் சிரியப் படைகள் கைப்பற்றியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கஃபார் அலெப்போ நகரத்திலுள்ள ரஷ்ய நிலைகளின் மீதான தாக்குதலொன்றில் அப்பகுதியிலுள்ள பிரதான குழுவான ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் பிரிவின் இஸ்லாமிய ஆயுததாரியொருவர் தன்னை வெடிக்க வைத்ததாக ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் பிரிவுடன் இணைந்துள்ள இபா செய்தி முகவரகம் கூறியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .