2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அலபாமாவில் சாதித்த கறுப்பினப் பெண்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலபாமாவில் இடம்பெற்ற செனட் இடைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் டக் ஜோன்ஸின் வெற்றிக்கு, கறுப்பின வாக்காளர்களின் வாக்குகளே, பிரதான பங்கை வகித்தன.

அலபாமாவில் நேற்று வாக்களித்தோரின், ஏறத்தாழ 30 சதவீதத்தினர் கறுப்பினத்தவர்கள் என்று, கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

வாக்களித்த கறுப்பினத்தவர்களில் 96 சதவீதத்தினர், ஜோன்ஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிலும் கறுப்பினப் பெண்களில் 98 சதவீதத்தினர், ஜோன்ஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வெள்ளையின ஆண்களில் 72 சதவீதத்தினரும், வெள்ளையினப் பெண்களில் 63 சதவீதத்தினரும், மூருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இந்நிலையில், கறுப்பின வாக்குகளே, ஜோன்ஸுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.

அதேபோல் இன்னொரு முக்கியமான அம்சமாக, இளையோரின் வாக்குகள், ஜோன்ஸுக்கு ஆதரவாக வந்து சேர்ந்தன. 18 தொடக்கம் 29 வயதுகளை உடையோரில் 60 சதவீதமானோரும், 30 தொடக்கம் 44 வயதுகளை உடையோரில் 61 சதவீதமானோரும், ஜோன்ஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மறுபக்கமாக, 46 தொடக்கம் 64 வயதை உடையோரில் 51 சதவீதத்தினரும், 65 வயதுக்கு மேற்பட்டோரில் 59 சதவீதத்தினரும், மூருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .