2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அஸ்ரனெக்கா பயன்படுத்துவதை இடைநிறுத்திய ஜேர்மனி, பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 16 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஸ்ரனெக்காவின் கொவிட்-19 தடுப்புமருந்து பயன்படுத்துவதை, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் இடைநிறுத்தியுள்ளன.

ஐரோப்பாவில் தடுப்புமருந்தைப் பெற்றவர்களில் இரத்தம் கட்டியதை தொடர்பான சில அறிக்கைகளையடுத்தே குறித்த முடிவுக்கு இந்நாடுகள் வந்துள்ளன.

இந்நிலையில், தடுப்புமருந்து பயன்படுத்துவதை ஆதரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், தடுப்புமருந்தால் இரத்தம் கட்டியமைக்கான எதுவித ஆதாரத்தையும் காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

தேசிய தடுப்புமருந்து கட்டுப்பாட்டாளரான போல் எஹ்ர்லிச் நிறுவகத்தின் ஆலோசனையையடுத்தே, தடுப்புமருந்து பயன்படுத்துவதை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹ்ன் தெரிவித்துள்ளார்.

தடுப்புமருந்து பெற்ற ஏழு பேரின் மூளைகளில் இரத்தம் கட்டியமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை குறித்த நிறுவகம் கோரியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்செரிக்கை நடவடிக்கையொன்றாக அஸ்ரனெக்கா பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னெச்சரிக்கை, தற்காலிக நடவடிக்கையாகவே அஸ்ரனெக்காவை பயன்படுத்துவதை இடைநிறுத்துவதாக, இத்தாலியின் மருத்துவ அதிகார சபை ஏ.ஐ.எஃப்.ஏ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புமருந்தைப் பயன்படுத்துவதை இடைநிறுத்துவதாக ஸ்பெய்னின் சுகாதாரமைச்சர் கரோலினா டரியஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐஸ்லாந்து, போர்த்துக்கல், ஸ்லோவேனியா, சைப்ரஸ் உள்ளிட்டவையும் தடுப்புமருந்து பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .