Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்கத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்ட தென்கிழக்கு லிபிய நகரான குஃப்ராவிலுள்ள இரகசியச் சிறைச்சாலை ஒன்றைத் தாங்கள் தேடியதாகவும், ஐந்து சிறுவர்கள், 15 பெண்கள் உள்ளடங்கலாக 156 ஆபிரிக்க அகதிகளை விடுவித்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையாக மாற்றப்பட்ட வீட்டொன்றிலிருந்து அகதியொருவர் தப்பி, தானும் ஏனைய அகதிகளும் ஆட்கடத்தல்காரர்களால் சித்திரவதை செய்யப்படுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தமையையடுத்து இம்மாதம் 16ஆம் திகதி தேடுதல் நடைபெற்றதாக குஃப்ரா பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறைந்தது ஆறு ஆட்கடத்தல்காரர்களை பாதுகாப்புப் படைகள் கைது செய்ததாகவும், அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக அரச வழக்குத் தொடருநர்களிடம் ஒப்படைத்ததாக முகவரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அகதிகள், சோமாலியா, எரித்திரியா, சூடானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago