2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆதித்யநாத்துக்கும் மாயாவதிக்கும் பிரசாரம் செய்யத் தடை

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பிரசாரத்தின் போது, மத ரீதியாக உரையாற்றினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், உத்தரப் பிரதேச முதலமைச்சர், யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்வதற்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக, ஆதித்யநாத்துக்கும் மாயாவதிக்கும், தேர்தல் ஆணையம் தனித்தனியே பிறப்பித்துள்ள உத்தரவில், ஆதித்யநாத், செவ்வாய்க்கிழமை முதல் 72 மணித்தியாளங்களுக்கும் மாயாவதி செவ்வாய்க்கிழமை முதல் 48 மணிநேரங்களுக்கும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் அதேநேரம் இருவருக்கும் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவ்பந்த் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், மாயாவதி உரையாற்றும் போது, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று மீரட் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஆதித்யநாத் உரையாற்றும் போது மத ரீதியிலான கருத்துகளைக் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .