2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் பாரிய சிறையுடைப்பு ஐ.எஸ் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரான ஜலலாபாத்திலுள்ள சிறைச்சாலையொன்று மீது நேற்றிரவு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து பாரிய சிறையுடைப்புக்கு வழிவகுத்துள்ளது.

அந்தவகையில், 24 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்குமிடையே இன்று துப்பாக்கி மோதல் வெடித்துள்ளது.

சிறைச்சாலையின் நுழைவாயிலில் நேற்று வாயிலில் கார்க் குண்டு வெடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே தாக்குதல் ஆரம்பமாகியிருந்ததுடன், பாதுகாவலர்களின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து பல்வேறு குண்டு வெடிப்புகள் இட்டம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 2,000 வரையான சிறைக்கைதிகள் உள்ள குறித்த சிறைச்சாலையின் மீதான தாக்குதலில் 30 அளவிலான ஆயுததாரிகள் பங்கெடுத்துள்ளதாக நன்கர்ஹர் மாகாணத் தலைநகரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரொருவரான சொஹ்ரப் குவாடெரி தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு துப்பாக்கி மோதலிலும், ஆரம்பத் தாக்குதலிலும் மூன்று ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும், 21 பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் இறந்ததாகவும் 43 பேர் காயமடைந்ததாகவும் நன்கர்ஹர் மாகாண ஆளுநரின் பேச்சாளர் அதாவுல்லா குக்யனி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று வரையில் 1,000 வரையான சிறைக்கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதாவுள்ளா குக்யனி குறிப்பிட்டபோதும் எவ்வளவு பேர் இன்னும் தப்பித்துள்ளனர் எனத் தெரிவித்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .