2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் மோதல் வெடித்தது

Shanmugan Murugavel   / 2021 மே 05 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஹெல்மன்ட் மாகாணத்தில், தலிபான் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் முறியடித்ததாக, அதிகாரிகளும், அங்குள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.

பல முனைகளில் தலிபான், அதனது வலிந்த தாக்குதலை நேற்று முன்தினம் ஆரம்பித்ததாக, ஹெல்மன்ட் மாகாண சபையின் தலைவர் அதாவுல்லா ஆஃப்கான் தெரிவித்துள்ளதுடன், மகாணத் தலைநகர் லஷ்கர் கஹ்வின் புறநகர்களைச் சூழவுள்ள சோதனைச் சாவடிகளை தலிபான் தாக்கியதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், விமானத் தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்தியதுடன், சிறப்பு கமாண்டோப் படைகளையும் தரையிறக்கியுள்ளன.

தலிபான்கள் பின்தள்ளப்பட்டபோதும், நேற்றும் மோதல் தொடர்ந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஆப்கான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஹெல்மன்ட், தென்கிழக்கு கஸ்னி, தென் கந்தகார் உள்ளடங்கலாக ஏழு மாகாணங்களில் தலிபானின் தாக்குதல்களுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் பாதுகாப்புப் படைகள் பதிலளிப்பதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெல்மன்டில் 100க்கும் மேற்பட்ட தலிபான் ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ், ஐ. அமெரிக்க படைகள் கடந்த சனிக்கிழமை வெளியேறுவது இணங்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .