2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை, ஆபத்தான நிலையில் தொடர்ந்து காணப்படுவதோடு, உயிர்காப்பு வசதிகளிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

93 வயதான வாஜ்பாய், கடந்த 9 வாரங்களாக, டெல்லியிலுள்ள, மருத்துவ விஞ்ஞானங்களுக்கான அனைத்திந்திய நிறுவக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலை, நேற்று (15) மேலும் மோசமடைந்தது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று  இரவு 7.15 மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்று, 50 நிமிடங்களாக அவரைப் பார்வையிட்டார். அவரின் பின்னர், மேலும் சில அமைச்சர்களும் அவரைச் சென்று பார்வையிட்டனர்.

முன்னாள் பிரதமருக்கு, நீரிழிவு நோய் உள்ளதோடு, அவரது சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகமே தொழிற்படும் நிலையிலுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வாஜ்பாய், 1996ஆம் ஆண்டு 13 நாள்கள் பிரதமராக இருந்ததோடு, பின்னர், 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையும், பிரதமராக இருந்திருந்தார்.

2009ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதோடு, தொடர்ச்சியாக அவரது நினைவுத் திறன் இல்லாது போய்க் கொண்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .