2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்பில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட ஆப்கானிஸ்தான் மாகாணமான குண்டூஸில், எட்டு சிறுவர்கள் மற்றும் ஆறு பெண்கள் உள்ளடங்கலாக குறைந்தது 15 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனமானது வீதியோரக் குண்டுவெடிப்பொன்றால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இமாம் சஹிப் மாவட்டத்தின் பிரதான வீதியொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக குறித்த மாவட்டத் தலைவர் மஹ்புபுல்லாஹ் சயெடி தெரிவித்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனத்தை வீதியோரக் குண்டு வெடிப்பொன்று தாக்கியபோது அவர்கள் திருமணக் கொண்டாட்டமொன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக மஹ்புபுல்லாஹ் சயெடி மேளும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியானது தலிபானால் கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த குண்டூஸ் ஆளுநர் அப்துல் ஜாபர் நயீமி, குண்டு வெடிப்புக்கு தலிபானையே குற்றஞ்சாட்டியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X