2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆப்கான் தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட சில தாக்குதல்களின் விளைவாக, நேற்று முன்தினம் (24) மாத்திரம், குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர். தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கான ஆதரவைப் பெறும் பொருட்டு, சர்வதேசச் சந்திப்பொன்று இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையிலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு, இராணுவக் காவலரண் ஒன்றை, தலிபான் ஆயுததாரிகள் தாக்கினர். இதன்போது, 18 படையினர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டதோடு, 5 பேர் காயமடைந்தனர். ஹெல்மன்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், நேட்டோவின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று, ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இவர்களின் விஜயத்தின் ஓர் அங்கமாகவே, எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள கூட்டம் அமையவுள்ளது.

தலிபான்களுடான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலைகளை ஆராய்வதே இக்குழுவின் நோக்கமென்ற நிலையில், தலிபான்களாலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, அவ்வாறான சமாதானப் பேச்சுவார்த்தையொன்று எவ்வளவுக்குச் சாத்தியமானது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .