2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஆப்கான் போரை நிறுத்த விரும்புகிறோம்’

Editorial   / 2018 பெப்ரவரி 16 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரை, பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக, தலிபான் குழு அறிவித்துள்ளது. சமாதானத்தை விரும்புவதாக, தலிபான்கள் விடுத்த அரிதான அறிவிப்பாக இது அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், தலிபான்களால் விடுக்கப்பட்டுள்ள இவ்வறிவிப்பு, எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருந்தாலும் கூட, இதன் உண்மையான பின்புலம் என்னவெனப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

ஏனெனில், சமாதானத்துக்கான அறிவிப்பை விடுத்த அறிவிப்பிலேயே, தமது அறிவிப்பை, தமது பலவீனமாகக் கருதக்கூடாது எனவும், ஐக்கிய அமெரிக்கப் படையினருக்கு எதிரான தமது போராட்டம் தொடருமெனவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் காணப்படும் ஐ.அமெரிக்கப் படையினர், அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய தலிபான்கள், “ஆக்கிரமிப்பு, முடிவுக்கு வர வேண்டும்” என்று கோரினர். அத்தோடு, ஆப்கானிஸ்தான் மக்களின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு, தமக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கையும் வீச்சமும் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தலிபான்களுக்குப் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் மறுபக்கமாக, இப்பின்னடைவுகளுக்குப் பதிலடி வழங்குவது போல, தலைநகர் காபூலில், தமது தாக்குதல்களை, தலிபான்கள் அதிகரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .