2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆயுட்கால ஜனாதிபதியாக ஸி ஜின்பிங்?

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தனது ஆயுட்காலம் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. தற்போதைய அரசமைப்பின்படி, ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர், இரண்டு தடவைகள் மாத்திரமே அப்பதவியை வகிக்க முடியும் என்ற நிலையில், அதை நீக்குவதற்கான முன்மொழிவையே, ஆளுங்கட்சி பரிந்துரைத்துள்ளது.

கட்சியின் மத்திய குழு, நேற்றைய (25) கூடி ஆராய்ந்த போது, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது என, சீன அரச ஊடகம் தெரிவித்தது. ஜனாதிபதிப் பதவிக்கு மாத்திரமன்றி, உப ஜனாதிபதிப் பதவிக்கும் பொருந்தும் வகையிலேயே, இம்மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என, அவ்வூடகம் குறிப்பிட்டது.

சீன ஜனாதிபதிப் பதவிக் காலம், 5 ஆண்டுகள் என்ற அடிப்படையில், தன்னுடைய முதலாவது பதவிக் காலத்தை நிறைவுசெய்யவுள்ள ஜனாதிபதி ஸி ஜின்பிங், எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதியாக, மீண்டும் தெரிவாகுவார்.

இப்போதிருக்கும் ஏற்பாட்டின்படி, 2023ஆம் ஆண்டில் அவர் பதவி விலக வேண்டியிருக்கும் என்ற அடிப்படையிலேயே, புதிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களை, நாட்டின் நாடாளுமன்றம் அங்கிகரிக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதிக்கு ஆதரவானவர்களே அங்கும் காணப்படும் நிலையில், இதற்கு முட்டுக்கட்டை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .