2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆயுததாரிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மூன்று ஆயுததாரிகள் சுட்டுக்கொலை

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆயுததாரிகக்கு எதிரான, பாதுகாப்பு படையிரின் செயற்பாடுகளின் அடுத்தகட்டமாக, பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், லக்ஷர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று ஆயுததாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

குப்வாரா மாவட்டத்தில், நேற்று முன்தினம் (21) மாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போதே, மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, அதேபகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதில்ல, பாதுகாப்பு  படையைச் சேர்ந்த வீரரொருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆயுததாரிகளை ஒழிப்பதற்கான இராணுவத்தினரின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 21ஆவது நாளில், இந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, 21 ஆக அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, 194 ஆயுததாரிகள் ஜம்மு - காஷ்மிர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல்வேறு ஆயுததாரிகள் அமைப்பைச் சேர்ந்த 258 ஆயுததாரிகளை இலக்கு​ வைத்து இந்த நடவடிக்கை இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களில், 128 பேர், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மிகுதியாக உள்ளவர்கள் உள்ளூர் காஷ்மிரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .