2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆர்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு மிளகுக் குண்டுகள் பிரயோகம்

Editorial   / 2020 மே 27 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டமூலமானது அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை புதுப்பித்துள்ள நிலையில், ஹொங் கொங்கின் மய்யத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு மிளகுக் குண்டுகளை ஹொங் கொங் பொலிஸார் இன்று பிரயோகித்ததுடன், ஏறத்தாழ 240 பேரை கைது செய்திருந்தனர்.

பதற்றங்கள் அதிகரித்த நிலையில் சீனத் தேசிய கீதத்தை அவமதிப்புக்குள்ளாக்குவதை குற்றவியலாக்கும் சட்டமூலமொன்றை விவாதிக்கவிருந்த ஹொங் கொங் சட்டசபையைச் சுற்றி கலகமடக்கும் பொலிஸார் தரையிறக்கப்பட்டு ஹொங் கொங் சட்டசபையில் கூடத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பார்க்காரர்கள் தடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்தாண்டு ஹொங் கொங்கை உலுக்கிய ஆர்ப்பாட்டங்களை பிரதிபலிக்கும் முகமாக அனைத்து வயதுப் பிரிவினரும் வீதிகளில் இறங்கியிருந்ததுடன், சிலர் கறுப்புடை அணிந்திருந்ததுடன், சில அலுவலக உட்டைகளை அணிந்திருந்ததுடன், சிலர் தமது முகங்களை குடைகளால் மறைத்திருந்தனர்.

பல கடைகள், வங்கிகள், அலுவலகங்கள் முற்கூட்டியே பூட்டப்பட்டிருந்தனர். டசின் கணக்கானோரைச் சுற்றிவளைத்த பொலிஸார், அவர்களை நடைபாதையொன்றில் இருத்தி வைத்து பின்னர் சோதனையிட்டிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .