2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆளுங்கட்சிக்கு எதிராக தி.மு.க முறைப்பாடு

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது என, தேர்தல் ஆணையத்தில், நேற்று (18), தி.மு.க தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், வாக்குப்பதிவு ஆரம்பித்த நேரம் முதல், தி.மு.க, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளான மக்கள் வாக்களித்து வருவதை பொறுத்துக்கௌ்ள முடியாத ஆளுங்கட்சி, அதன் கூட்டணி கட்சியினர், 3 மணிக்கு மேல், தமிழகத்திலுள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர் எனத் ​தகவல்கள் வந்துள்ளதாக, குறித்த முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொலிஸாரும் ஒத்துழைக்கும் வகையில், பொலிஸ் பாதுகாப்பைத் திரும்பப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்புக் கமெராவை, குறிப்பிட்ட நேரமொன்றில் செயலிழக்கச் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது என்று தெரியவந்துள்ளது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதைத் தடுத்து நிறுத்த, தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நியாயமான, வெளிப்படையானத் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X