2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அரச கல்வி வாய்ப்பிலும் வேலைவாய்ப்பிலும், உயர்த்தப்பட்ட சாதிகளை (பொதுப் பிரிவினர்) சேர்ந்த ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமூலத்துக்கு, இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், நேற்று முன்தினம் (12) ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, இது சட்டமாகியுள்ளது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, மத்திய அமைச்சரவை, இம்மாதம் 7ஆம் திகதி, ஒப்புதல் வழங்கியது. ஆனால், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க, சட்டத்தில் இடமில்லாததால், அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

இதற்கான ஒப்புதல், நாடாளுமன்றத்தின் கீழவையிலும் மேலவையிலும் கிடைத்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அவர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து, இது அமுலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் பொதுத் தேர்தல், மே மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையில், அதை முன்னிட்டே இத்திருத்தம் கொண்டுவரப்பட்டது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினாலும், திருத்தத்துக்கான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .