2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவின் பணபலத்தை எதிர்த்து வெற்றி பெறுவோம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) பணபலத்தை எதிர்த்து இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று இந்தியாவின் தமிழ்நாட்டின் நெல்லையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்கும்போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த கே.எஸ். அழகிரி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“சென்னை கடற்கரை சாலையில் காந்தி நினைவு நாளான நேற்று (02) அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இது கண்டிக்கத்தக்கது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகுல் காந்தி, பிரியங்கா, சோனியா காந்தி போன்றவர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருவதில்லை. ஆனாலும் அவர்களை பிரசாரத்துக்காக அழைத்துள்ளோம். இடைத்தேர்தலில் எங்களது பிரதான நோக்கம் அ.இ. அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும்.

மத்திய அரசின் ஜாதி, மத, மொழி வாரியான பிரித்தாழும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் போய் விட்டது. தூத்துக்குடியில் ஒரு மாதத்தில் 19 கொலைகள், திருச்சியில் நகைக் கடையை உடைத்து 13 கோடி இந்திய ரூபாய் நகை கொள்ளை. இதுபோல தினமும் வரும் பிரச்சினைகளை பொலிஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாங்கள் ஆளும் கட்சியின் பண விநியோகத்தை எதிர்த்து சத்தியம், இலட்சியம், கொள்கை ரீதியில் மக்களை நம்புகிறோம். கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து வாக்கு கேட்டு வருகிறோம்.

ஜெயலலிதா சொந்த தொகுதியில் போட்டியிட்டதில்லை. இதுபோல பல தலைவர்கள் வேறு இடங்களில் போட்டியிடுவது வழக்கம். காங்கிரஸில் எந்த உட்கட்சி பிரச்சனையும் இல்லை. இது ஒரு பெரிய ஜனநாயக கட்சி. அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.

இந்த ஆட்சி மாற வேண்டும் என்று தான் தமிழக, புதுச்சேரி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களை தந்தார்கள். உள்ளாட்சி தேர்தலை கண்டு ஆளும் கட்சி அச்சம் கொள்கிறது. தமிழகத்தில் பாடத்திட்டம் வேறு, தேர்வு முறை வேறு. எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை” எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .